hamburgerIcon

Orders

login

Profile

STORE
Skin CareHair CarePreg & MomsBaby CareDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Pregnancy Journey arrow
  • கர்ப்பிணி பெண்கள் பெயிண்ட் அடிக்கலாமா? | Can pregnant women paint in Tamil arrow

In this Article

    கர்ப்பிணி பெண்கள் பெயிண்ட் அடிக்கலாமா? | Can pregnant women paint in Tamil

    Pregnancy Journey

    கர்ப்பிணி பெண்கள் பெயிண்ட் அடிக்கலாமா? | Can pregnant women paint in Tamil

    1 January 2024 அன்று புதுப்பிக்கப்பட்டது

    பெயிண்டிங் - இது கேன்வாஸ் அல்லது பர்னிச்சர் மீது இருக்கலாம். இருப்பினும், பெயிண்டிங் என்பது பெண்கள் குதூகலமாக செய்யக் கூடிய விஷயமாகும். இது உங்கள் கர்ப்பத்திற்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுமா? உங்கள் கற்பனைத் திறனை நீங்கள் முடக்கி வைக்க வேண்டுமா? அல்லது ஆபத்துகளை எதிர்கொண்டு பெயிண்ட் அடிக்கலாமா? இந்த வழிகாட்டுதல் கட்டுரையில், கர்ப்ப காலத்தில் பெயிண்ட் செய்வது தொடர்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் அனைத்து கவலைகள் குறித்தும் நாங்கள் விவரித்துள்ளோம்.

    இன்றைய நாட்களில், மாடர்ன் இல்லங்களுக்கான பெயிண்ட்கள் நல்ல தரத்தில் வருகின்றன. இவை உங்களுக்கு பெயிண்ட் ஃபியூம்ஸ் (புகை) அல்லது உங்கள் குழந்தையை பாதிக்கக் கூடிய ஆபத்துகள் இன்றி வருகின்றன. சுருக்கமாக சொல்லப்போனால், பெயிண்டிங் செய்வதால் பிறக்காத உங்கள் குழந்தைக்கு எந்தவிதமான ஆபத்துகளும் ஏற்படாது. அதேசமயம், சால்வண்ட் அடிப்படையிலான தரம் குறைந்த பெயிண்ட் அல்லது ஈயம் கலந்த பெயிண்ட் வகைகளை பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படலாம். சால்வண்ட் அடிப்படையிலான பெயிண்ட் வேலைகள் மற்றும் ஈய அச்சுகளை கொண்ட பழைய பெயிண்ட் வேலைகள் போன்றவற்றை மேற்கொள்ளும்போது, உங்கள் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட கொஞ்சம் கூடுதலான வாய்ப்பு இருக்கிறது.

    கர்ப்ப காலத்தில் பெயிண்ட் செய்வது பாதுகாப்பானது தான் என்றாலும், எந்தெந்த வகையிலான பெயிண்ட்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பெயிண்ட் வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பெயிண்ட் அடிப்பதை எப்போது நிறுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

    கர்ப்பத்தின் இரண்டாவது அத்தியாய காலத்தில் பெயிண்ட் செய்வது (Painting While Pregnant Second Trimester in Tamil)

    பெரும்பாலான தகவல்களின்படி, கர்ப்பத்தின் முதலாவது அத்தியாய காலத்தில் பெயிண்ட் மற்றும் பெயிண்ட் ஃபியூம்ஸ் போன்றவற்றின் பயன்பாடு சற்று குறைவாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், பெயிண்டில் உள்ள ரசாயனங்களை கர்ப்பிணி பெண்கள் சுவாசிக்கக் கூடாது. குழந்தையின் வளர்ச்சிக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். கர்ப்பத்தின் இரண்டாவது அத்தியாய காலத்தில் பெயிண்ட் அடிப்பது பாதுகாப்பானது தான். இந்த சமயத்தில் ஆபத்தான ஃபியூம்ஸ் அல்லது சுவாசிக்கப்படும் ரசாயனங்கள் போன்றவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

    பெயிண்ட் ஃபியூம்ஸ் மற்றும் கர்ப்பத்தின் மூன்றாவது அத்தியாயம் (Paint Fumes And Pregnancy Third Trimester)

    கர்ப்பத்தின் இரண்டாவது அத்தியாயத்தை போலவே, மூன்றாவது அத்தியாய காலத்திலும் பெயிண்ட் அடிப்பது பாதுகாப்பான விஷயம் தான். அதேசமயம், அபாயங்கள் குறித்து பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது குறைவான VOC உடைய பெயிண்ட் அல்லது உயர்தர சால்வண்ட் இல்லாத பெயிண்ட் ஆகியவை குறித்து எச்சரிக்கை தேவை. இது மட்டுமல்லாமல் பெயிண்ட் செய்யும் பணியை காற்றோட்டமான அறையில் மேற்கொள்வது நல்லது. இதனால், பெயிண்ட் வாடையை நாம் சுவாசிப்பது குறையும்.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்பிணி பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுமா?(Do Pregnant Women Get Their Period? In Tamil)

    ஸ்பிரே பெயிண்ட் ஃபியூம்ஸ் மற்றும் கர்ப்பம் (Spray Paint Fumes and Pregnancy in Tamil)

    கர்ப்ப காலத்தின் முதலாவது அத்தியாயத்தில் பெயிண்ட் ஃபியூம்ஸ் நம் மீது படருமானால் அது வயிற்றில் வளரக் கூடிய குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, குழந்தையின் நரம்பு மண்டலத்தில் குளறுபடி ஏற்படக் கூடிய வாய்ப்புகள், சிறுநீர் பாதை தொற்று பிரச்சினைகள் ஏற்படும். அதேபோல குழந்தையின் காது, மூக்கு, தொண்டை போன்றவற்றிலும் கூட பிரச்சினை ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் பெயிண்ட் அடிப்பதை முடிந்த வரை தவிர்க்க பாருங்கள். ஒருவேளை முடியாவிட்டால் ஆபத்து மிகுந்த ஃபியூம்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். புதிதாக பெயிண்ட் செய்யப்பட்ட அறைகளில், பெயிண்ட் வேலை முடிந்த பிறகு குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்காவது ஃபியூம்ஸ் இல்லாமல் இருக்கும். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் அதுபோன்ற இடங்களில் ஓரிரு நாட்களுக்கு இருக்கலாம்.

    ஸ்பிரே பெயிண்ட் என்று வந்து விட்டால், அதில் தலைச்சுற்றல், குமட்டல் அல்லது தலைவலி போன்ற பின் விளைவுகள் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் ஸ்பிரே பெயிண்ட் அல்லது அதன் ஃபியூம்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவை குழந்தையின் நரம்பு கட்டமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது குழந்தையின் உடல் உறுப்புகளுக்கு நீண்ட கால அடிப்படையில் பாதிப்பு ஏற்படலாம்.

    கர்ப்ப காலத்தில் பயன்படுத்தக் கூடிய வெவ்வேறு விதமான பெயிண்ட்கள் (Different Kinds of Paint to Use During Pregnancy in Tamil)

    1. கர்ப்ப காலத்தில் அக்ரிலிக் பெயிண்ட் பயன்பாடு(Acrylic Paint While Pregnant)

    தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட அக்ரிலிக் பெயிண்ட் அல்லது லேடக்ஸ் கொண்ட பெயிண்ட்களில் பெண்களுக்கு கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்துகின்ற சால்வண்ட் இருக்கலாம். அக்ரிலிக் பெயிண்டில் இருக்கக் கூடிய பயோசைட்ஸ் மற்றும் எதர்ஸ் போன்றவை தாய்மார்களுக்கு மிகக் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். எனவே, கர்ப்ப காலத்தில் அக்ரிலிக் பெயிண்ட் வகையை தவிர்ப்பது நல்லது.

    2. கர்ப்ப காலத்தின்போது ஆயில் பெயிண்ட் பயன்பாடு(Oil Painting While Pregnant)

    ஆயில் பெயிண்ட்களில் ஆபத்தான சால்வண்ட்கள் இடம்பெற்றிருக்கும். இவற்றை கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும். இது மட்டுமல்லாமல் ஆயில் பெயிண்ட்களில் ஆவி வடிவில் VOC வெளிப்படும். இதன் காரணமாக சோர்வு, மயக்கம், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே, கர்ப்ப காலத்தில் இந்த பெயிண்டை தவிர்ப்பது நல்லது.

    3. கர்ப்ப காலத்தில் வாட்டர்கலர் பெயிண்ட் பயன்பாடு(Watercolour Painting While Pregnant)

    கர்ப்ப காலத்தின்போது வாட்டர்கலர் பெயிண்டிங் செய்யலாம். ஏனென்றால், குறைவான ரசாயனம் அல்லது சால்வண்ட் கொண்ட வாட்டர்கலர் பெயிண்ட்கள் கர்ப்ப காலத்தில் பெயிண்ட் செய்வதற்கான சிறப்பான தேர்வாக அமையும். இது பாதுகாப்பான பெயிண்ட் வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக, சால்க் பெயிண்ட் அல்லது வீடுகளுக்கான எமல்ஷன் பெயிண்ட் போன்ற வகைகள் பாதுகாப்பான பெயிண்ட் ரகத்தைச் சேர்ந்தவை ஆகும்.

    பொறுப்புதுறப்பு(Disclaimer)

    பெயிண்டிங் செய்யும் முன்பாக, கர்ப்ப காலத்தில் நீங்கள் வாங்கும் பெயிண்ட்களை சரிபார்த்து வாங்கவும். ஏதேனும் பாதிப்புகளை தவிர்க்க மருத்துவ நிபுணர் அல்லது மருத்துவரை பரிசீலனை செய்யவும்.

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ's)

    கர்ப்ப காலத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு பெயிண்ட் செய்யலாமா? (Can I Paint While Pregnant If I Wear a Mask)

    கர்ப்ப காலத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு பெயிண்டிங் செய்வது கொஞ்சம் பலன் தரலாம். குறிப்பாக, மாஸ்க் அணிவதால் உங்களுக்குள் ஃபியூம்ஸ் ஊடுருவுவதற்கான வாய்ப்பு குறைவாகும். அதேசமயம், வெறுமனே தூசுகளை மட்டும் புறந்தள்ளக் கூடிய சாதாரண மாஸ்க் வகைகளை பயன்படுத்தாமல், சுவாச பிரச்சினைகளையும் தடுக்கக் கூடிய உயர் தரமான மாஸ்க்குகளை வாங்கிப் பயன்படுத்தவும்.

    கர்ப்ப காலத்தில் அக்ரிலிக் பெயிண்ட் பயன்படுத்தலாமா? (Can I use acrylic paint while pregnant ?)

    நல்ல காற்றோட்டம் கொண்ட அறையில் பெயிண்ட் செய்யும்போது, கர்ப்பிணி பெண்கள் அக்ரிலிக் பெயிண்ட் வாங்கி பயன்படுத்துவது கொஞ்சம் பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், இந்த பெயிண்ட்கள் உயர் தரத்திலும் இருக்க வேண்டும்.

    Tags

    Painting during Pregnancy in Tamil, Which paint affect during Pregnancy in Tamil, Is painting safe during Pregnancy in Tamil, How to Choose the Right Materials for Painting During Pregnancy in Tamil, Precautions to Take When Painting While Pregnant in Tamil, Can pregnant women paint in English, Can pregnant women paint in Telugu, ⁠Can pregnant women paint in Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Dhanalakshmi Pillai

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to PCOS & PCOD

    PCOS & PCOD

    PCOS உடன் கர்ப்பம் தரிப்பது எப்படி: பெண்களுக்கான இறுதி வழிகாட்டி I How to Get Pregnant with PCOS: The Ultimate Guide for Women in Tamil

    Image related to Infertility

    Infertility

    அடைப்பு ஏற்பட்ட ஃபலோபியன் குழாய்கள்: அவை உங்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை எவ்வாறு பாதிக்கின்றன I Blocked Fallopian Tubes: How They Affect Your Chances of Conceiving in Tamil

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    கர்ப்ப காலத்தில் வெப்ப அரிப்பு : காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு I Heat Rash During Pregnancy: Causes, Symptoms and Prevention in Tamil

    Image related to Diet & Nutrition

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் பாகற்காய் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நன்மைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் I Bitter Gourd During Pregnancy: Benefits and Precautions You Should Know in Tamil

    Image related to Fertility

    Fertility

    ஃபோலிகுலர் ஆய்வைப் புரிந்துகொள்வது: பெண் கருவுறாமைக்கான விரிவான வழிகாட்டி I Understanding Follicular Study: A Comprehensive Guide to Female Fertility in Tamil

    Image related to Maternity Fashion

    Maternity Fashion

    நர்சிங் டேங்க் டாப் வாங்கும் போது பின்வருவனவற்றில் மீது கவனம் கொள்ளவும்

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.